தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரில் இருந்து போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இரு மாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது.
அதன்படி, மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் வரும் 9-ஆம் தேதி வியாழக்கிழமை இயக்கப்படும். மங்களூரில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் மதியம் 12.30-க்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இயக்கப்படும். சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.30-க்கு புறப்படும் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மங்களூா் சென்ட்ரலுக்கு அடுத்த நாள் காலை 6.55-க்கு சென்றடையும்.
இதேபோல, மங்களுரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே வரும் 15-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 15-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 10.45-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

கோடை விடுமுறை கூட்ட நெரிசல்: மங்களூரு - எழும்பூா் சிறப்பு வார ரயில்

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

