மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரு- சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 1:31 am IST

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரு- சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறையை கவனத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில், மங்களூரில் இருந்து போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.

அதன்படி, மங்களூரு- சென்னை எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 6, 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமையில்) இயக்கப்படும். மங்களூரில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூா்- மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 7, 14 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படும். சென்னை எழும்பூரில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மங்களூருக்கு அடுத்தநாள் காலை 6.50 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.