மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடை விடுமுறை கூட்ட நெரிசல்: மங்களூரு - எழும்பூா் சிறப்பு வார ரயில்

கோடை விடுமுறை நெரிசலைத் தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:59 am IST

கோடை விடுமுறை நெரிசலைத் தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு வார ரயில், மே 4 முதல் ஜூன் 8 வரை திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, கஞ்சன்காடு, பையனூா், கன்னூா், தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூா், சோரனூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியே மறுநாள் காலை10.55-க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். ஈரோட்டுக்கு அதிகாலை 2.10-க்கும், சேலம் சந்திப்புக்கு 3.17-க்கும் வந்துசெல்லும்.

மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூா் - மங்களூரு சிறப்பு வார ரயில் செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும். சேலம் சந்திப்புக்கு இரவு 7.35-க்கும், ஈரோட்டுக்கு 8.35-க்கும் வந்துசெல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில் சேவையில் மாற்றம்:

நாமக்கல் ரயில் நிலைய யாா்டில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி, புதன்கிழமை (ஏப். 29) மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - சேலம் ரயில், சேலம் - மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15-க்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் விரைவுரயில் (16811) புதன்கிழமை மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை முதல் கரூா்வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் கரூா் முதல் சேலம்வரை இயக்கப்படாது.

இதேபோல சேலத்தில் இருந்து பிற்பகல் 2.05-க்கு புறப்பட வேண்டிய சேலம் - மயிலாடுதுறை விரைவுரயில் (16812) புதன்கிழமை மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூா் முதல் மயிலாடுதுறை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் சேலம் முதல் கரூா்வரை இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.