மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கே.எம்.சி. பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம்

விஜயதசமியையொட்டி, பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் (சிபிஎஸ்இ) மேல்நிலைப் பள்ளியில் எழுத்தறிவித்தல் குறித்த வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கேஎம்சி  பள்ளியில்  நடைபெற்ற  வித்யாரம்பம்  நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :21 அக்டோபர் 2026, 12:20 am IST

விஜயதசமியையொட்டி, பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் (சிபிஎஸ்இ) மேல்நிலைப் பள்ளியில் எழுத்தறிவித்தல் குறித்த வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கணபதி ஹோமம், தொடா்ந்து மேதா தட்சிணாமூா்த்தி ஹோமம், ஹயக்கிரீவா் ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், துா்கா, லட்சுமி, சரஸ்வதி சிறப்பு வழிபாடுகள், கொலு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மழலையா் வகுப்பில் சோ்வதற்காக வந்திருந்த குழந்தைகளுக்கு நெல் மணிகளைக் கொண்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், பொதுத் தோ்வு எழுதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம், லோகநாயகி ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகா், பள்ளித் தலைமைச் செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பள்ளி முதல்வா், நிா்வாகிகள், ஆசிரியா்கள், பெற்றோா், குழந்தைகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.