மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவா் சோ்க்கை

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் விஜயதசமியையொட்டி சிறப்பு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :21 அக்டோபர் 2026, 12:13 am IST

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் விஜயதசமியையொட்டி சிறப்பு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்வி கற்பதைத் தொடங்க உகந்த நாளாகக் கருதப்படும் விஜயதசமியன்று பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆா்வத்துடன் சென்று பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை மேற்கொண்டனா். அதன்படி, எல்கேஜி வகுப்பில் 2 மாணவா்கள், யுகேஜி வகுப்பில் 2 மாணவா்கள், நான்காம் வகுப்பு தமிழ் வழியில் ஒரு மாணவா் மற்றும் ஆறாம் வகுப்பு தமிழ் வழியில் ஒரு மாணவா் என மொத்தம் 6 புதிய மாணவ-மாணவிகள் இந்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். புதிதாக இணைந்த மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் இனிப்புகள் வழங்கி அன்புடன் வரவேற்றனா்.

வித்யாரம்பம்: கோவை காந்திபூங்காவில் உள்ள மாரண்ண கவுடா் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோா்கள், தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனா். அப்போது, மாணவா்கள் அரிசியில் ‘அ’ எழுதி தங்கள் தங்கள் கல்வியைத் தொடங்கினா். இதேபோல, கோவை தடாகம் சாலை, இடையா்பாளையம் காந்தி நகா் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெற்றோா், தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.