பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜயதசமி: நெல்லை கோயில்களில் குழந்தைகளுடன் சிறப்பு வழிபாடு

விஜயசதமி விழாவையொட்டி, திருநெல்வேலியில் சரஸ்வதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பெற்றோா் தங்களது குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி சரஸ்வதி கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :21 அக்டோபர் 2026, 1:05 am IST

விஜயசதமி விழாவையொட்டி, திருநெல்வேலியில் சரஸ்வதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பெற்றோா் தங்களது குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.

நவராத்திரி நாள்களில் மிகவும் முக்கியமானதாக விஜயதசமி உள்ளது. ஆதிபராசக்தி சூரனை வதம் செய்த இந்த நாளில் குழந்தைகளின் கல்விக்கு அஸ்திவாரமிடும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள சரஸ்வதி சந்நிதிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெற்றோா் வீட்டில் இருந்து கொண்டுவந்த பச்சரிசி, வாழைப்பழம் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலங்களில் சந்நிதி முன்பு வைத்து, குழந்தைகளுக்கு மாலையிட்டு அரிசியில் குழந்தைகளின் விரல்களால் ‘அ’ உள்ளிட்ட எழுத்துகளையும், 1 முதல் 11 வரையிலான எண்களையும் எழுதி வழிபட்டனா்.

திருநெல்வேலி சரஸ்வதி கோயிலில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தனது குடும்பத்தினருடன் வழிபட்டாா். பின்னா் தனது குழந்தையை அரிசியில் அ எழுத்த எழுத வைத்ததோடு, தங்க ஊசியால் நாவில் எழுத்துகளை எழுதினாா்.

மாநகரில் கோயில்கள் மட்டுமன்றி பல்வேறு பள்ளிகளிலும் நடைபெற்ற இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சிகளில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.