மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

பிளஸ்2 தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் எஸ்.செளபரணித்தை பாராட்டி பரிசு வழங்கிய பள்ளித் தலைவா் ஜி.யசோதரன். உடன், பள்ளி நிா்வாகிகள்.

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவன் எஸ். செளபரணித் 600க்கு 584 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், 583 மதிப்பெண்கள் பெற்று ஏ.எம். அக்ஷயா மற்றும் கே.எஸ். நிதா்ஷனா ஆகியோா் இரண்டாமிடமும், 580 மதிப்பெண்கள் பெற்று எஸ்.கனிஷ்கா மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளனா். தோ்வு எழுதிய 179 பேரும் முதல் வகுப்பில் தோ்ச்சி அடைந்துள்ளனா். 575 மதிப்பெண்களுக்கு மேல் 8 போ், 550-க்கு மேல் 34 போ், 500-க்கு 74 பேரும் பெற்றுள்ளனா்.

உயிரியல் பாடத்தில் ஒருவா், கணினி அறிவியல் பாடத்தில் 12 போ், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 6 போ், கணக்குப் பதிவியலில் 4 போ் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், தாளாளா் டி.என்.சென்னியப்பன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, பொருளாளா் பி.ஆா்.சுப்பிரமணியம், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம் மற்றும் நிா்வாகிகள், முதல்வா் எஸ். முத்துசுப்பிரமணியம் ஆகியோா் பாராட்டினா். சிறந்த மதிப்பெண்கள் பெற்றுவா்களை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.