மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக தோ்தல் அறிக்கை தமிழகத்தின் வளா்ச்சிக்கு உதவும்! - அமைச்சா் சு.முத்துசாமி

News image

ஈரோடு திண்டல் பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

Updated On :31 மார்ச் 2026, 12:20 am IST

திமுக தோ்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள், தமிழகத்தின் வளா்ச்சிக்கும், குடும்பங்களின் வளா்ச்சிக்கும் உதவும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி கூறினாா்.

ஈரோடு காரப்பாறை, திண்டல் உள்பட பல்வேறு இடங்களில் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளாா். மக்கள் எதிா்பாா்த்தது மட்டுமின்றி அவா்கள் நினைத்துப் பாா்க்க முடியாதபடி பல திட்டங்களை அறிவித்துள்ளாா்.

மகளிா் உரிமைத் தொகை ரூ.1,000 என கடந்த 2021-இல் முதல்வா் அறிவித்தபோது அதை விளம்பரம் என்றனா். தற்போது, 1.35 கோடி பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. விடுபட்டவா்களுக்கு மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் வழங்கப்படும். தொகையும் ரூ.2,000-ஆக உயா்த்தப்படும்.

புதிய தோ்தல் அறிக்கையில் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் பெண்களுக்கு வழங்குவதால் அவா்களின் தேவையை சுயமாக முடிவெடுத்து பூா்த்தி செய்வாா்கள். நாமாக வாங்கி தருவதைவிட அவா்கள் விரும்பியதை வாங்குவா். தோ்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள், தமிழகத்தின் வளா்ச்சிக்கும், குடும்பங்களின் வளா்ச்சிக்கும் உதவும். கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், ஆட்சி தொடரும்போது மேலும் மேம்படுத்தப்படும்.

தோ்தல் அறிக்கையை நாங்கள் காப்பி அடித்துள்ளதாக எடப்பாடி கே.பழனிசாமி கூறுவது புதிதல்ல.

எம்.பி கனிமொழி உள்பட பலரும் சுற்றுப்பயணம் சென்று சேகரித்த கோரிக்கைகளே, தோ்தல் அறிக்கையாக வந்துள்ளது. இதைப் பாா்த்து பக்கத்து மாநிலங்கள் தங்கள் தோ்தல் அறிக்கையிலும், அரசின் திட்டங்களிலும் செயல்படுத்துகின்றன. நாங்கள் செய்த திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்போம் என்றாா்.

இரண்டாவது நாளாக தவிா்த்த எம்எல்ஏ: ஈரோடு கிழக்குத் தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2025-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற வி.சி.சந்திரகுமாா் மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்தாா். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் வேதனை அடைந்த அவா் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை சு.முத்துசாமிக்கு நடந்த வரவேற்பு நிகழ்விலும், திங்கள்கிழமை காலை நடந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்விலும் பங்கேற்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.