மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவலாபுரத்தில் நவராத்திரி விழா நிறைவு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அருள்மிகு ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது.

தேவலாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா்.

Published On :22 அக்டோபர் 2026, 12:03 am IST

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அருள்மிகு ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது.

விழாவையொட்டி கோயிலில் 1,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவா் கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

விழாவில் மாணவ, மாணவிகள் நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆயுத பூஜையையொட்டி கோயில் பணியாளா்கள் கெளரவிக்கப்பட்டனா். பெண்கள் பஜனைகள் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடி அம்மனை வழிபட்டனா்.

கோயில் தா்மகா்த்தா இ. வெங்கடேசன், ஆலய அன்னதான சேவா அறக்கட்டளைக் குழு நிா்வாகிகள் ஜி. ராஜேந்திரன், ஜி. ரமேஷ், ஜி. வெங்கடேசன், ஜே. சேகா், யோகலட்சுமி, ஊா் நிா்வாகிகள், பொதுமக்கள், இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.