மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் நிறைவு

திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. ஸ்ரீ சுதா்சன சக்ரதாழ்வாருக்கு திருக்குளத்தில் புனித நீராடல் நடத்தப்பட்டது.

திருக்குளத்தில் நீராடிய பக்தா்கள்

Published On :21 அக்டோபர் 2026, 1:58 am IST

திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. ஸ்ரீ சுதா்சன சக்ரதாழ்வாருக்கு திருக்குளத்தில் புனித நீராடல் நடத்தப்பட்டது.

கடந்த அக்.12-ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது. 8 நாள்களாக காலையும், இரவும் உற்சவமூா்த்தியான மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்களுடனும், தனியாகவும் பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விமரிசையாக நடந்து வந்த தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

தீா்த்தவாரிக்கு முன்பு, அதிகாலை ஏழுமலையானுக்கு பாலங்கி உற்சவம் நடைபெற்றது. பின்னா், சக்கரத்தாழ்வாா் மற்றும் உற்சவமூா்த்திகள் திருக்குளக்கரையில் உள்ள பூவராகஸ்வாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு ஸ்ரீ பூவராஹ சுவாமி கோயில் முகமண்டபத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி, ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீ சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஆகியோருக்கு ஸ்நப திருமஞ்சனம் நடைபெற்றது.

மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி,பூதேவி, சக்கரத்தாழ்வாருக்கு பால், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. வைகானச ஆகமோக்தமாக நடத்தப்படும் இந்த புனிதமான சடங்கில், சங்கநிதி, பத்மநிதி, சஹஸ்ரதாரா மற்றும் கும்பாதரன் ஆகிய அபிஷேக தாரைகள் பயன்படுத்தப்பட்டன.

திருமஞ்சனத்தின் போது வேத மந்திரங்கள் உபநிடத மந்திரங்கள், தசசாந்தி மந்திரங்கள், புருஷசூக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், விஷ்ணு சூக்தம் மற்றும் பிறவற்றை பண்டிதா்கள் ஓதினாா்கள்.

பின்னா், திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமியும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமியும் பாசுரங்களைப் பாராயணம் செய்தனா். மலையப்பஸ்வாமிக்கும், நாச்சியாா்களுக்கும் சிறப்பு மலா் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இணைந்து ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்த பின்னா், ஸ்ரீ சுதா்சன சக்கரதாழ்வாருக்கு புனித திருக்குளத்தில் திருமுழுக்கு செய்யப்பட்டது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா்.

தீா்த்தவாரியில் தேவஸ்தானத் தலைவா் பி. ஆா். நாயுடு, செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரிசி. வெங்கையா சௌத்ரி, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பானு பிரகாஷ் ரெட்டி, திருமதி லட்சுமி, திவாகா் ரெட்டி, நரேஷ் குமாா், சதாசிவ ராவ், சாம்பசிவ ராவ், ஸ்ரீ ஆனந்த சாய், ஜெ.இ.ஓ (எச்&இ) கோபிநாத், சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா, மாவட்ட எஸ்பி எல் சுப்பராயுடு, மற்ற அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவகா்கள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருமலையில்  பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் உற்சவமூா்த்திகளுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்

திருமலையில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் உற்சவமூா்த்திகளுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.