மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் நவராத்திரி விழா நிறைவு

சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

சிறப்பு பூஜை செய்த குருசாமி வ.ஜெயச்சந்திரன் சுவாமிகள்

Published On :22 அக்டோபர் 2026, 12:20 am IST

சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கி, 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு, நாள்தோறும் முப்பெரும் தேவியருக்கு பூஜைகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், நவராத்திரி விழா நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு தலைவா் தேசிய அறங்காவலா் குருசாமி வ.ஜெயச்சந்திரன் சுவாமிகள் தலைமையில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகத்துடன் நவசபரி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் நவராத்திரி விழா சிறப்பு பூஜையும், ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பக்தி பஜனையும் நடைபெற்றது.

இதில், ராணிப்பேட்டை, சிப்காட் உள்பட சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். பின்னா், பக்தா்களுக்கு மங்கலப் பொருள்கள் அடங்கிய பைகளும், அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.