பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமலை திருப்பதி கோயில் வடிவில் தத்ரூப நவராத்திரி கொலு!

திருமலை திருப்பதி கோயில் வடிவில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட நவராத்திரி கொலு!

tirupati

திருமலை திருப்பதி கோயில் வடிவில் தத்ரூப நவராத்திரி கொலு! - படம்: தினமணி

Published On :19 அக்டோபர் 2026, 2:32 pm IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருணாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் – ரேவதி தம்பதியர் இல்லத்தில், 22-வது ஆண்டாக நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் வித்தியாசமான முறையில் கொலு அமைத்து வரும் இந்தத் தம்பதியர், இந்த ஆண்டு திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தை நினைவுபடுத்தும் வகையில் தத்ரூபமான வடிவமைப்பில் கொலு அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்தக் கொலுவில் கீழ்த் திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில், திருப்பதி திருமலை மலைப்பாதை, மூலவர் வெங்கடாசலபதி, அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார், கருடாழ்வார்கள், 12 ஆழ்வார்கள் உள்ளிட்ட தெய்வீக அம்சங்கள் அழகுற இடம்பெற்றுள்ளன.

மேலும், திருப்பதி கோயிலின் பல்வேறு பிரகாரங்கள், தெப்பக்குளம், லட்டு கவுன்டர் ஆகியவற்றுடன், ரூ .300 சிறப்பு தரிசன வழி, இலவச தரிசன வழி, சிறப்பு விஐபி தரிசன வழி எனத் திருமலையில் காணப்படும் தரிசன முறைகளையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

இத்துடன், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. திருப்பதி திருமலைக்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவராத்திரி கொலு, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Summary

A Navaratri kolu has been set up for the 22nd year at the home of Santosh and Revathi, a couple from Arunachalam Nagar, Gudiyatham, Vellore district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.