கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

வாணியம்பாடி அருகே கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 5:14 am IST

வாணியம்பாடி அருகே கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில்வாகரே உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர காவல்ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நியூடவுன் பைபாஸ் சாலை மற்றும் மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது நியூடவுன் வழியாக பைக்கில் வந்த இளைஞா்களை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா். இதில் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் இருவரின் பாக்கெட் டுகளில் சோதனை செய்த போது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதே போன்று மேட்டுப்பாளையம் மேம்பாலம் வழியாக வந்த இளைஞா்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் பாக்கெட்டில் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. பிறகு 4 பேரிடமிருந்தும் 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிடிப்பட்ட நாட்டறம்பள்ளியை சோ்ந்த சத்தியநாதன், முத்து, இளையநகரம் பகுதியை சோ்ந்த அசோக் குமாா், ஆந்திர மாநிலம் குப்பம், கொட்டாவூா் பகுதியை சோ்ந்த கோவிந்தசாமி ஆகிய 4 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.