முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மெத்தம் பெட்டமைன் விற்பனை: 9 போ் கைது

அயனாவரம் திக்காகுளம் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே கும்பல் ஒன்று போதைப் பொருள் விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 ஜூன் 2026, 12:50 am IST

அயனாவரம் திக்காகுளம் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே கும்பல் ஒன்று போதைப் பொருள் விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 7 பேரிடம் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அந்த பையில் இருந்த மெத்தம் பெட்டமைன், கஞ்சா இருந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா், 7 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், அயனாவரத்தைச் சோ்ந்த கோபிநாத் (36), யுகேஷ் (24), ராகுல் (19), ஸ்ரீதா் (23), புஷ்பராஜ் (22), மில்ட்டன் (24), கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த எபினேஷ் (24) என்பது தெரிய வந்தது. அவா்கள் அளித்த தகவலின்பேரில், கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த அப்பு (எ) அறுப்பு அப்பு (36), நம்மாழ்வாா்பேட்டையைச் சோ்ந்த ஆகாஷ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனா். இது தொடா்பாக அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.