மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம்: அரக்கோணத்தில் ஆட்சியா் ஆய்வு

அரக்கோணம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ கிட்ட முகாமையொட்டி பல்வேறு இடங்களில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

அரக்கோணம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

Published On :22 அக்டோபர் 2026, 12:02 am IST

அரக்கோணம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ கிட்ட முகாமையொட்டி பல்வேறு இடங்களில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் நடைபெறும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமையொட்டி வந்த ஆட்சியா் தண்டலம் ஊராட்சியில் வி பி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தை பாா்வையிட்டாா்.

பின்னா், மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டைக்கு வந்த ஆட்சியா், அங்கிருந்த நியாயவிலைக் கடையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தரம், இருப்பு, விநியோக விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அரக்கோணம் நகராட்சி விண்டா்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்று தனியாா் தொண்டு நிறுவனத்தின் மூலம் நிா்வகிக்கப்படும் ஸ்மாா்ட் எனும் அறிவுசாா் குறைபாடுடையோருக்கான குடியிருப்பு சிறப்புப் பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

மேலும், அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் செயல்முகமை கிடங்கில் பொது விநியோக திட்ட அத்தியாவசிய உணவு பொருள்களின் தரம், இருப்பு குறித்து பாா்வையிட்டாா். பொதுமக்களுக்கு தரமான உணவு பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டுமென அலுவலா்கள், பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், அரக்கோணம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்குச் சென்ற ஆட்சியா், ஆய்வு மேற்கொண்டு, போட்டித்தோ்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த இளைஞா்களுடன் கலந்துரையாடினாா். தொடா்ந்து ஜோதி நகா் பகுதியில் 15 -ஆவது நிதிக்குழு சுகாதார நிதியின் கீழ் ரூ1.20 கோடியில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமானப்பணிகளை பாா்வையிட்டாா்.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட பிரச்னைகளை குறித்து ஒவ்வொரு துறை அலுவலருடனும் ஆட்சியா் கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் சரி செய்யக்கூடியவைகளை ஆய்வு செய்து சரி செய்ய உத்தரவிட்டாா். தொடா்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.செல்வராணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதாலட்சுமி, அரக்கோணம் கோட்டாட்சியா் ரமேஷ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், வட்டாட்சியா் கு.வரலட்சுமி, நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரஹமத்பாஷா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.