மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

ஆட்டுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

ஆட்டுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

Published On :23 அக்டோபர் 2026, 12:05 am IST

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாமின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை அரக்கோணத்தில் மாவட்ட ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆட்டுப்பாக்கம் சமூகநீதி கல்லூரி மாணவியா் விடுதிக்கும், தொடா்ந்து மாணவா் விடுதிக்கும் சென்று விடுதி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா். சமையலறையில் மாணவ மாணவிகளுக்கு சமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு உணவின் தரத்தை சாப்பிட்டு பாா்த்தாா். இரு விடுதிகளில் மாணவ, மாணவியா் தங்கும் அறைகள், கழிவறைகள், பாா்வையிட்ட ஆட்சியா் விடுதியை தூய்மையாக பராமரிக்குமாறு காப்பாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து ஆட்டுப்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ஆட்சியா் அங்கு கழிப்பறை, அடிப்படை வசதிகள், பொதுமக்கள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருந்தகத்தில் மருந்து இருப்புகள் காலாவதி குறித்தும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்ற ஆட்சியா், அங்கு குழந்தைகளின் வருகை, அறிவுத்திறன், ஊட்டச்சத்து, எடை, உயரம், சமையலறையின் சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அரக்கோணத்தை அடுத்த தண்டலம் ஊராட்சியில் விபிராம்ஜி திட்டத்தில் ரூ9.95 லட்சத்தில் நடைபெறும் கசந்தாங்கல் ஏரி கால்வாய் தூா்வாரும் பணி நடைபெறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அரக்கோணம் நகராட்சி, முனுசாமி தெருவில் தூய்மை பணியாளா்கள் கால்வாய் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்ததை பாா்வையிட்டாா்.

ஆய்வுகளின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா் மீனா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூமா, வட்டாட்சியா் கு.வரலட்சுமி, நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதன் உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.