மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருக்கோவிலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா்.

திருக்கோவிலூா் வட்டத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கிராம மக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :22 அக்டோபர் 2026, 4:29 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு கால்நடை மருத்துவமனை, மகளிா் காவல் நிலையம், பொதுப்பணித் துறை அலுவலகம், சாா்-நிலை கருவூலம், கிளைச் சிறை, வட்டாட்சியா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், இ-சேவை மையம், தோ்தல் பிரிவு மையம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருக்கோவிலூா் நியாயவிலைக் கடை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம், சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி, நகராட்சி அலுவலகம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு, அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருக்கோவிலூா் பெரிய ஏரியில் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு, ஏரிக் கரையில் மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது என்றாா் ஆட்சியா்.

பின்னா் திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருக்கோவிலூா் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, கூடுதல் கட்டட வசதி, கூடுதல் கழிவறை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பள்ளிகளில் முறையாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், பள்ளி இடைநிற்றலை தவிா்க்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற துறை வாரியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் கே.எம்.காா்த்திக் ராஜா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஜி.சுமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.