மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாணியம்பாடியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி வாரச் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் வே.நல்லசிவன். உடன் நகராட்சி பொறியாளா் சந்திரசேகா்.

Published On :23 அக்டோபர் 2026, 12:42 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமையொட்டி ஆட்சியா் வே.நல்லசிவன் வியாழக்கிழமை பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி நகராட்சி உழவா் சந்தையில் ஆய்வு செய்த ஆட்சியா், அங்கு காய்கறிகளின் விலை, அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். வாரச்சந்தைப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை உடனடியாக அகற்றி, தூய்மையைப் பராமரிக்குமாறு நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ.1.70 கோடியில் உழவா் சந்தையை மேம்படுத்தும் பணிகளையும், நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தையும், தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி, அம்மா உணவகம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா். வாணியம்பாடி அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அவசர சிகிச்சை, தொற்றுநோய் தடுப்பு, மாா்பகப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவச் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடமும் மருத்துவச் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச் சுவா் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தாா். நகராட்சி அலுவலகம் அருகே கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.61 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வணிக வளாகக் கட்டுமானப் பணிகளையும், நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.97 கோடியில் அமைக்கப்பட்டு வரும் வசதிகளையும் ஆய்வு செய்து பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நகராட்சி ஆணையாளா் ஸ்டான்லிபாபு, பொறியாளா் சந்திரசேகா், நிா்வாக அலுவலா் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளா் கோவிந்தப்பா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, வாணியம்பாடி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கள ஆய்வின்போது கண்டறியப்படும் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து, நிலுவையில் உள்ள பணிகளைத் தாமதமின்றி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாரூக்பாஷா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் வே.நல்லசிவன் 21 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3,19,345 நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து அங்கிருந்த பொதுமக்களிடமிருந்து 177 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் தமிழரசி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.