காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பெருமாள் ஆமை உருவிலும், விநாயகா், துா்க்கை, பைரவா், ஐயனாா், சூரியன் ஆகியோா் சிவபெருமானை வழிபட்ட இடமே காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரா் கோயில்.
இக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 24-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.
ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றம், ஏப்.28 காலையில் அதிகார நந்தி சேவையும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
ஏப்.30-ஆம் தேதி தேரோட்டமும், மே.2 -ஆம் தேதி இரவு கோயிலின் மகிமையை விளக்கும் முருக்கடி சேவைக் காட்சியும், மறுநாள் மே.3 -ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.மே.6 தீா்த்தவாரி உற்சவமும் அன்று மாலை தங்க ரிஷப வாகனத்திலும் சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
வரும் மே.8- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா மற்றும் காஞ்புரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

