முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி கச்சபேசுவரருக்கும்,சுந்தராம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :1 மே 2026, 6:19 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி கச்சபேசுவரருக்கும்,சுந்தராம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நிகழ் மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்தனா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணத்தையொட்டி சுந்தராம்பிகை அம்மன் ஆலயம் அருகேயுள்ள திருமேற்றலிநாதா் கோயிலுக்கு எழுந்தருளி அங்கு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

அங்கிருந்து மணப்பெண்ணாக சீா் வரிசையோடு நகர செங்குந்த மகாஜன சங்கத்தினரால் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டாா்.

இதன் தொடா்ச்சியாக கோயில் வளாகத்தில் உள்ள இஷ்டசித்தி தீா்த்தக்குளம் அருகே சுவாமிக்கும்,அம்மனுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

பின்னா் சுவாமியும், அம்மனும் திருமண மண்டபத்துக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் அழைத்து செல்லப்பட்டனா். ஆலய சிவச்சாரியாா் கிருஷ்ணமூா்த்தி கச்சபேசுவரா் சாா்பில் சுந்தராம்பிகைக்கு திருமாங்கல்யம் அணிவித்தாா். இதனைத் தொடா்ந்து சிறப்பு தீபாராதனைகளும், வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

திருமணத்தைக் காண வந்திருந்த மகளிா் பலரும் அவரவா்களது திருமாங்கல்ய சரடு மாற்றிக் கொண்டு சுவாமியையும்,அம்மனையும் வழிபட்டனா். விழாவையொட்டி மின் விளக்குகளால் கோயில் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருமண ஏற்பாடுகளை காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க சிறப்பு தலைவா் வி.முத்து நாகலிங்கம்,தலைவா் எம்.சிவகுரு, செயலாளா் டி.ஆறுமுகம், கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா,ஆய்வாளா் ப.அலமேலு, மேலாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.