மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image

சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:47 am IST

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரியகாஞ்சிபுரம் பகுதியில் விநாயகா், துா்கை, பைரவா், சூரியன், அய்யனாா் ஆகிய தெய்வங்கள் வழிபட்ட பெருமைக்குரியது கச்சபேசுவரா் திருக்கோயில். பெருமாள் ஆமை(கச்சம்)வடிவில் வழிபட்டதால் இக்கோயில் கச்சபேசுவரா் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் சித்திரைத்திருவிழா வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றிய பின் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா மற்றும் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கொடியேற்றத்தை தொடா்ந்து சுவாமியும், அம்மனும் பவளக்கால் சப்பரத்தில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இரவு சிம்ம வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்தனா்.

விழாவையொட்டி, விழா நடைபெறும் மே 8-ஆம் தேதி வரை சுவாமியும், அம்மனும் தினசரி வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரததில் வீதியுலா வரவுள்ளனா். ஏப்.28ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஏப். 30-ஆம் தேதி தேரோட்டமும்,மே 2- ஆம் தேதி முருக்கடி சேவை எனும் தல மகிமையை விளக்கும் காட்சிகளும் நடைபெறுகின்றன. மறுநாள் மே 3-ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், மே 5-ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்திகள் உற்சவமும் நடைபெறுகிறது.

மே 7-ஆம் தேதி 108 சங்காபிஷேகமும், மறுநாள் மே 8-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமரதுரை தலைமையில் அதிகாரிகள், கோயில் சிவாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்கள், நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.