வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு.

Chennai Metro

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Published On :5 நவம்பர் 2026, 6:34 pm IST

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்காக 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நவ. 5, 6 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது.

நவம்பர் 5, 2026 (வியாழக்கிழமை இன்று):

பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour) மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான மாலை 3 மணிக்குப் பதிலாக, இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும்

நவம்பர் 6, 2026 (வெள்ளிக்கிழமை நாளை):

பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour) மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான மாலை 5.00 மணிக்கு பதிலாக, மாலை 4.00 மணிக்கே தொடங்கி, இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும்.

முனைய நிலையங்களிலிருந்து (Terminal Stations) புறப்படும் கடைசி மெட்ரோ ரயில் நேரம் (06.11.2026):

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில்: வழக்கமான இரவு 11:00 மணிக்கு பதிலாக, நள்ளிரவு 12:00 மணி வரை இயங்கும்.

மஞ்சள் வழித்தடத்தில்: வழக்கமான இரவு 9:00 மணிக்கு பதிலாக, இரவு 11:00 மணி வரை இயங்கும்.

மேற்கண்ட மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் பயணிகள் இதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Summary

Chennai Metro Rail administration has announced that additional metro trains will be operated for two days to cater to those traveling to their hometowns for Diwali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.