மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீதிமன்றத் தலைவா் பணியிடை நீக்கம்: போலந்தில் நள்ளிரவுப் போராட்டம்!

போலந்தில் நீதிமன்றத் தலைவா் பணியிடை நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம்...

Poland

போலந்தில் போராட்டம் - AP

Published On :1 நவம்பர் 2026, 2:39 am IST

போலந்து நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றத் தலைவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நீதிமன்ற வளாகத்தின் வெளியே நள்ளிரவில் மாபெரும் போராட்டம் வெடித்தது.

ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட தற்போதைய பிரதமா் டொனால்ட் டஸ்க் தலைமையிலான அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக முக்கிய எதிா்க்கட்சி ஆதரவாளா்கள் போராட்டத்தில் இறங்கினா். அப்போது, காவல்துறையினா் மீது பொருள்களை வீசித் தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இத்திடீா் அரசியல் குழப்பத்தையடுத்து, ஆப்பிரிக்க நாடான செனகலுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போலந்து அதிபா் கரோல் நவ்ரோக்கி, அவசரமாகத் தாயகம் திரும்பினாா். தொடா்ந்து, நீதிமன்றத்துக்குச் சனிக்கிழமை நேரில் சென்ற அவா், பணிநீக்கம் செய்யப்பட்ட தலைவா் போக்டன் ஸ்வீச்கோவ்ஸ்கியை நீதிமன்றத்துக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றாா்.

Summary

Court president suspended: Midnight protest in Poland

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.