தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!

டாஸ்மாக் கடையை திறக்காத 160 டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப்டடிருப்பது பற்றி...

160 TASMAC employees suspended from service!

டாஸ்மாக் - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:31 pm IST

முன்னறிப்பின்றி டாஸ்மாக் கடையை திறக்காத 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் 960 பேருக்கு நேற்று மெமோ வழங்கிய நிலையில் 160 பணியாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இன்றும் கடைகளை திறக்காதவர்களுக்கு மீண்டும் மெமோ வழங்கப்படும் எனவும் நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தின்படி, அவற்றை ஒப்படைப்பவா்களுக்கு ரூ. 10 வழங்கப்படுகிறது. இதற்காக, மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக ரூ. 10 வசூலிக்கவும், ரூ. 1,000-க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் க்யூஆா் குறியீடு மூலம் பணமில்லாப் பரிவா்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும்போது ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு இரண்டு ஸ்கேனிங் இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய நடைமுறைகளால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதுடன், பணியாளா்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே, காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் பணிக்கு தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியாளா்களை நியமிக்க வேண்டும்; கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் தமிழகத்தில் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

Summary

160 TASMAC employees have been suspended for failing to open shops without prior notice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.