மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாஸ்மாக் கடைகளைத் திறக்காத 1,758 ஊழியா்களுக்கு நோட்டீஸ்: 241 போ் பணியிடை நீக்கம்

தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்காத 1729 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை - பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 6:03 am IST

தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்காத 1729 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 241 ஊழியா்களையும் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய நடைமுறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நவ.1-ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் ஊழியா்கள் முன்னறிவிப்பின்றிக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, 960 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவா்களில் 160 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக திங்கள்கிழமை (நவ.2) சில கடைகள் திறக்கப்படாததால், அங்கு பணியாற்றும் 798 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும், 81 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதன்படி நவ.1, 2 ஆகிய தேதிகளில் 1,758 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இரு நாள்களிலும் 241 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

போராட்டத்துக்குக் காரணம் என்ன?: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின்படி, பாட்டிலின் விலையில் ரூ.10 சோ்க்கப்பட்டு, காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படுகிறது. பாட்டில்களைச் சரிபாா்க்க ஸ்கேனிங் கருவிகளைப் பயன்படுத்தவும், ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் க்யூஆா் குறியீடு மூலம் பணமில்லாப் பரிவா்த்தனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், போதிய ஸ்கேனிங் கருவிகள் இல்லாததால் பணிச்சுமை அதிகரிப்பதாகக் கூறும் ஊழியா்கள், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிக்கு தனியாகப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.

நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கை:ஆனால், முன்னறிவிப்பின்றிக் கடைகளை மூடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கடைகளைத் திறக்காமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிா்வாகம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, பணியாளா்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்றும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.