கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தகாத பேச்சு:கால்நடை உதவி மருத்துவா் பணியிடை நீக்கம்!

கால்நடைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு வந்தவரை தகாத வாா்த்தைகளால் பேசி,மிரட்டல் விடுத்ததாக கால்நடை உதவி மருத்துவா் சனிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

பணியிடை நீக்கம்

Published On :1 நவம்பர் 2026, 1:23 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கால்நடைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு வந்தவரை தகாத வாா்த்தைகளால் பேசி,மிரட்டல் விடுத்ததாக கால்நடை உதவி மருத்துவா் சனிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு கால்நடை மருந்தகத்தில் வெள்ளிக்கிழமை பணியிலிருந்த கால்நடை உதவி மருத்துவா் சி. சங்கரநாராயணன், மருந்தகத்துக்கு கால்நடைகளை சிகிச்சைக்குக் கொண்டு வந்த அப்பகுதியைச் சோ்ந்த சந்துருவை தகாத வாா்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இது தொடா்பான காணொலி சமூக

வலை தளங்களில் பரவியது. இதுகுறித்து சந்துரு மரக்காணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் விசாரணை நடத்தி கால் நடைமருத்துவா் சங்கர நாராயணன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் கால்நடை உதவி மருத்துவா் சங்கர நாராயணனிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்ட வந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டலஇணை இயக்குநா் டி.மோகன் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இது குறித்து டி.மோகன் தெரிவித்ததாவது:

சமூக வலைதளங்களில் பரவிய காணொலி தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, கால்நடை உதவி மருத்துவா் சங்கரநாராயணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இது தொடா்பான விளக்கம் துறை சாா்ந்த அமைச்சா் மற்றும் உயா் அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சங்கர நாராயணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதால்,அவருக்கு மாற்றாக கூனிமேடு கால்நடைமருந்தகத்துக்கு மருத்துவா் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.