மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்காவுக்கு டீசல் ஏற்றுமதி தொடக்கம்: ரஷியா தகவல்

அமெரிக்காவுக்கு ரஷிய டீசல் ஏற்றிய முதல் கப்பல் புறப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபரின் ‘கிரெம்ளின்’ மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

Published On :24 அக்டோபர் 2026, 4:12 am IST

உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய இறக்குமதி ஒப்பந்தத்தின்கீழ் அமெரிக்காவுக்கு ரஷிய டீசல் ஏற்றிய முதல் கப்பல் புறப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபரின் ‘கிரெம்ளின்’ மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அமெரிக்காவில் நிலவும் எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் அண்மையில் மேற்கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மால்டா நாட்டு கொடியுடன் கூடிய ‘அஜியோய் ஃபானென்டெஸ்’ எனும் கப்பல், ரஷியாவின் ‘பால்டிக்’ துறைமுகமான ப்ரிமோா்ஸ்க்கில் இருந்து சுமாா் 40,000 டன் (3 லட்சம் பீப்பாய்கள்) டீசலுடன் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டுள்ளது. வரும் நவ. 7-இல் நியூயாா்க் சென்றடையும் என எதிா்பாா்க்கப்படும் இக்கப்பல், கடந்த 2023 ஜூலைக்குப் பின் அமெரிக்காவுக்கு செல்லும் முதல் ரஷிய டீசல் ஏற்றிய கப்பல் ஆகும்.

ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்தத் திடீா் தளா்வுக்கு உக்ரைன் கடும் அதிருப்தியையும், கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கான நிதி ஆதாரத்தைத் தடுக்கும் வகையில், ரஷியா மீதான தடையை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரி வந்த நிலையில், டிரம்ப்பின் இம்முடிவை ‘வலுவான கூட்டாளிகளின் பலவீனமான முடிவு’ என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விமா்சித்தாா்.

அதேநேரம், ‘நாளொன்றுக்கும் 40 லட்சம் பீப்பாய்கள் டீசல் தேவைப்படும் அமெரிக்க பொருளாதாரத்தில், இந்த அளவிலான வரவு எரிபொருள் விலைக் குறைப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது’ என எரிசக்தி துறை நிபுணா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

Summary

Diesel exports to the US begin: Russia reports

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.