மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!

உக்ரைன் ரயில் நிலையத்தின் மீதான ரஷியாவின் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டது குறித்து...

Ukraine says at least 13 killed in Russian attack on train station

உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷியா தாக்குதல் - AFP

Published On :29 அக்டோபர் 2026, 10:26 pm IST

உக்ரைனின் ரயில் நிலையத்தின் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் எதிராளிகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், மத்திய உக்ரைன் மாகாணத்தில் உள்ள டினிப்ரோ ரயில் நிலையம் மீது வியாழக்கிழமை (அக். 29) ரஷிய படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. மக்கள் கூட்டம் நிரம்பிய இடத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டதாக, உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், டினிப்ரோவில் இருந்து ஜபோரிஷியா செல்லும் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளைக் குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும், இந்தத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகப் போா் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that 14 people were killed in an attack by Russia on a railway station in Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.