தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒரே நேரத்தில் 1,000 டிரோன்கள்... ரஷியா மீது உக்ரைன் அதிரடித் தாக்குதல்!

ரஷியா முழுவதும் ஒரே நேரத்தில் 1,000 டிரோன்களை ஏவி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் இன்று நடத்தியுள்ளது.

உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கார் - AP

Published On :18 அக்டோபர் 2026, 4:57 pm IST

ரஷியா முழுவதும் ஒரே நேரத்தில் 1,000 டிரோன்களை ஏவி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் இன்று நடத்தியுள்ளது.

உக்ரைன் - அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷியா மீதான இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ரஷியாவின் எரிவாயு நிலைகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று 1,000-க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷியா மீது ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள எண்ணெய் முனையம் ஒன்றின்மீது நடத்திய தாக்குதலால் அந்தப் பகுதி முழுவதும் தீப்பிடித்தது. அதேபோல, மற்றொரு எண்ணெய் கிடங்கிலும் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், ஒருவர் கொல்லப்பட்டு, 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷியாவின் 15 பிராந்தியங்களில் உக்ரைனால் ஏவப்பட்ட 1,015 டிரோன்களை தாக்கி அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் ஒரு பெண் பலியானதாகவும், 6 வயது சிறுமி உள்பட இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து, கல்வி நிறுவனம் ஒன்று சேதமடைந்து, பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

Summary

Ukraine today launched its largest airstrike yet, launching 1,000 drones simultaneously across Russia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.