மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கிய 3 எண்ணெய்க் கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு...

Iran says 3 oil tankers struck mines.

ஹோர்முஸ் நீரிணையில்... - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 7:34 pm IST

ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்ல முயன்ற 3 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதாக, ஈரானிய படைகள் அறிவித்துள்ளன.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும், அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்களுக்கும் ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே வெளிநாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தங்களின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்ல முயன்ற 3 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி தீப்பற்றி எரிந்ததாக, ஈரானின் புரட்சிகர காவல் படை இன்று (அக். 29) அறிவித்துள்ளது.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3 கப்பல்களும், ஈரானிய அதிகாரிகளின் எச்சரிக்கையைப் புறக்கணித்து ரேடார் கருவிகளை அணைத்தபடி அவ்வழியாகச் சென்றதாக, ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் சில கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததை பிரிட்டன் ராணுவத்தின் கண்காணிப்புக் குழு உறுதி செய்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கப்பல்கள் குறித்தும், அதில் பயணித்த மாலுமிகளின் நிலை குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளித்து வருகின்றது. ஆனால், சமீபகாலமாக அவ்வழியாகச் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து கண்ணிவெடித் தாக்குதல்களில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian forces have announced that three oil tankers, which attempted to pass through the Strait of Hormuz, were struck by a mine attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.