பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எங்கள் நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது! ஈரான் அறிவிப்பு!

ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரையில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவிப்பு...

Strait of Hormuz will never open until Iran’s conditions are met

ஈரான் தலைநகரில் வைக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வாய் தைக்கப்பட்டது போன்ற படம் கொண்ட விளம்பரப் பலகை... - AP | கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 5:18 pm IST

ஈரானின் நிபந்தனைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும் வரையில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது.

இந்தப் போரில், ஈரானிய படைகள் தங்களின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளன. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் நிபந்தனைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும் வரையில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித்தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி இன்று (அக். 29) அறிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“ஹோர்முஸ் நீரிணை இன்று ஈரானின் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும், ஈரானிய அரசின் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை அது ஒருபோதும் திறக்கப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, சர்வதேச நாடுகளின் வலியுறுத்தல்களைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் குறிப்பிட்ட பாதையின் வழியாக மட்டுமே கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், மற்ற பாதைகளில் ஈரானிய படைகள் கண்ணிவெடிகளைப் பொருத்தியுள்ளதால், ஈரானின் அனுமதியின்றி அவ்வழியாகச் சென்ற கப்பல்கள் குண்டுவெடிப்பில் சிக்கி வருகின்றன.

இதனால், ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran's Revolutionary Guard has announced that the Strait of Hormuz will not be opened until Iran's conditions are fully met.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.