பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்மொழிவு: நிராகரித்த டிரம்ப்!

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஈரானின் முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்தார்.

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Published On :26 செப்டம்பர் 2026, 11:03 pm IST

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஈரானின் முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்தார்.

ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், ஈரான் மீதான எரிப்பொருள் சார்ந்த தடைகளை நீக்குதல், லெபனானை உள்ளடக்கிய போர்நிறுத்தம் போன்ற நிபந்தனைகளை ஈரான் குறிப்பிட்டிருந்தது.

மேலும், நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் 7 நாள்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் ஈரான் முன்மொழிந்திருந்தது.

ஆனால், போரில் மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருப்பதால் ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகக் கூறி அந்த முன்மொழிவை டிரம்ப் நிராகரித்தார்.

அவர் பேசுகையில், “அவர்கள் (ஈரான்) ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். அது நல்லதுதான். ஆனால், அதேபோல நானும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறேன். அது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அமெரிக்கா தங்களது முன்மொழிவை ஏற்றுக்கொண்டால் ஈரானும் தனது கடமைகளை நிறைவேற்றும் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்திருந்தார்.

Summary

US President Donald Trump rejected Iran's proposal to open the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.