மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறித்து...

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Published On :27 செப்டம்பர் 2026, 9:14 am IST

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப் 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இரு நாடுகளும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், ஈரான் மீதான எரிப்பொருள் சார்ந்த தடைகளை நீக்குதல், லெபனானை உள்ளடக்கிய போர்நிறுத்தம் போன்ற நிபந்தனைகளை ஈரான் முன்வைத்தது.

இந்த நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் 7 நாள்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் ஈரான் முன்மொழிந்திருந்தது. இதையடுத்து, இந்த நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்தார்.

இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், “ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் விரும்புகிறது. நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால், அவர்களுடைய நிபந்தனைகளை ஏற்க முடியாது.

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரானியர்கள் பலியாகிக் கொண்டிருப்பதால் ஹோர்முஸ் நீரிணையை திறக்க அவர்களும் விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

Summary

US President Donald Trump stated that the Strait of Hormuz is entirely under US control.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.