மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமைதிப்பேச்சில் புதின்? ரஷியா உடன் இவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றியது இல்லை! - ஈரான்!

இதற்கு முன்பு ரஷியா உடன் இவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றியதில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சர் பேச்சு...

Iran and Russia

ரஷிய அமைச்சர் லாவ்ரோவ் உடன் ஈரானிய அமைச்சர் அராக்சி - எக்ஸ்

Published On :20 அக்டோபர் 2026, 11:22 am IST

ரஷியா உடன் இதற்கு முன்பு இவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றியதில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுஆயுதத் திட்டத்தை எதிர்த்து அந்நாட்டின் மீது அமெரிக்க படைகள் கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் போர் தொடுத்துள்ளன. ஆனால், இந்தப் போரில் தற்போது ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதில் அமெரிக்கா மும்முரம் காட்டி வருகின்றது.

அமெரிக்காவுக்கு எதிராக வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் வளைகுடா பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளை ரஷிய அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ உடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி கடந்த திங்களன்று (அக். 20) முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இந்தச் சந்திப்பு குறித்து ஈரானிய அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில்,

“நாங்கள் ஐரோப்பா முதல் மேற்கு ஆசியா வரை, லெபனான், பாலஸ்தீனம், உக்ரைன் மற்றும் யேமன் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும், பொருளாதார மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பின் விரிவாக்கம் குறித்தும் கவனம் செலுத்தினோம்.

வரலாற்றில் இதற்கு முன்பு ஈரான் மற்றும் ரஷியா இவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றியதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்வதற்குத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் லாவ்ரோவின் ஈரான் பயணம் அமைந்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.

இதன்மூலம், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ரஷிய அதிபர் புதின் நேரடியாகத் தலையீடக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian Foreign Minister Seyyed Abbas Araqchi said that he had never worked so closely with Russia before.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.