மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஷியாவைத் தொடர்ந்து..! ஈரான் செல்லும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி!

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்குச் செல்வது குறித்து...

Pakistan's Army Chief Asim Munir and iran foreign minister

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி. - கோப்புப் படம் | எக்ஸ்

Published On :20 அக்டோபர் 2026, 12:06 pm IST

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் இருதரப்புக்கும் இடையே பாகிஸ்தான் அரசு போர்நிறுத்தம் கொண்டு வருவதற்குத் தொடர்ந்து முயன்று வருகிறது.

ஏற்கெனவே, பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் கொண்டு வரப்பட்ட போர்நிறுத்தம் சில வாரங்களிலேயே முறிந்து இருதரப்பும் மீண்டும் போர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் இன்று (அக். 20) அரசு முறைப் பயணமாக ஈரானுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில், ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மற்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரை அவர் நேரில் சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்கா உடனான போரால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மத்தியஸ்தம் செய்யத் தயார் என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று ஈரான் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan Army Chief Asim Munir is reportedly traveling to Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.