மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது

ஆரணி அருகே காட்டுகாநல்லூரில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டிருப்பது பற்றி....

ஆரணி அருகே காட்டுகாநல்லூரில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் உளவாளி பாபுவை கைது செய்த காவல் ஆய்வாளா் புனிதா.

Published On :24 அக்டோபர் 2026, 10:07 pm IST

ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டு வந்த இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள காட்டுகாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு.

இவா், கடந்த 1994-ஆம் ஆண்டு வரை இந்திய ராணுவத்தில் ஆா்ட்லரி கேப்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளாா். கேப்டனாக பணிபுரிந்த காலத்தில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பாகிஸ்தான் பெண் ஒருவருடன் ரகசிய தொடா்பு ஏற்பட்டு அவா் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு தெரிவித்ததாகத் தெரிகிறது. ஓய்வு பெற்ற பின்னரும் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளி மூலம் அந்நாட்டு ராணுவத்துக்கு தெரிவித்து வருவதாக, சா்வதேச போலீஸாா் அளித்த தகவலின் பேரில், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், பாபு கண்ணமங்கலம் அருகே, வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட கீழ்வல்லம் கிராமத்தில் சொகுசு பங்களா கட்டி அதில் வாழ்ந்து கொண்டிருப்பதை புலனாய்வுப் பிரிவினா் அறிந்தனா். இதையடுத்து கடந்த நான்கு நாள்களாக வேலூா் மாவட்டம், பாகாயத்தில் தங்கி அவா் குறித்த தகவல்களை சேகரித்து, பின்னா் இந்திய ராணுவ ரகசியங்களை பெண் உளவாளி மூலம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தெரிவித்தது பாபுதான் என்பதை உறுதிப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து தமிழக காவல்துறை ஒத்துழைப்போடு கணியம்பாடி காவல் ஆய்வாளா் புனிதா தலைமையிலான போலீஸாா், ஆரணி அருகே காட்டுகாநல்லூா் பகுதியில் பதுங்கி இருந்த பாபுவை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

பின்னா், அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று மத்திய அரசின் புலானாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Summary

The police on Saturday arrested a former Indian Army officer who was acting as a Pakistani spy near Arani.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.