மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

த்ரிஷாவைக் காண திரண்ட ரசிகர்களால் திணறிய கோவை!

கோவையில் த்ரிஷாவைக் காண திரண்ட ரசிகர்களால் பரபரப்பு....

Fans gathered in Coimbatore to catch a glimpse of Trisha

கோவையில் த்ரிஷா.

Published On :24 அக்டோபர் 2026, 9:19 pm IST

கோவையில் தனியார் மொபைல் கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை த்ரிஷா, சாலை வலம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கோவை மாவட்டம், காந்திபுரம் நூறடி சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் மொபைல் கடை திறப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக இன்று கலந்துகொண்ட நடிகை த்ரிஷா, கடையைத் திறந்து வைத்தார்.

அவரது வருகையறிந்த 500-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் பொதுமக்களும் கடை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இருப்பினும், காவல் துறையினரும் பவுன்சர்களும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். த்ரிஷா கடைக்கு வருகைபுரியும் போது, திரண்டிருந்த ரசிகர்களும் பொதுமக்களும் அவரைக் காண்பதற்கு ஆர்வமுடன் முன்னேறி வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Story image

பவுன்சர்களும் காவல் துறையினரும் மிகவும் சிரமப்பட்டு அவர்களைத் தடுத்தனர்.

கடைத் திறப்பு விழாவை முடித்துக்கொண்டு புறப்படும் பொழுது, நடிகை த்ரிஷா, ரசிகர்களையும் பொதுமக்களையும் பார்த்துக் கையசைத்ததோடு, சிலருக்குக் கைகுலுக்கவும் செய்தார்.

பின்னர், சுமார் 100 மீட்டர் தூரம் காருக்குள் இருந்தவாறு சாலை வலம் சென்று ரசிர்களை உற்சாகப்படுத்தினார்.

முன்னதாக அவர், ரசிகர்கள் மத்தியில் மைக் மூலம் பேச முயன்றபோது, மைக் வேலை செய்யாததால் பேசாமல் புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Actress Trisha, who arrived to participate in a private mobile store opening ceremony in Coimbatore, delighted fans by taking a road procession.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.