தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!

பாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா்

Published On :24 அக்டோபர் 2026, 3:56 am IST

பாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் கைபா்-பக்துன்குவா, பலூசிஸ்தான் மாகணங்களில் அந்நாட்டு அரசுக்கு எதிராகப் பல்வேறு ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் பகுதிகள் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானின் பிராந்தியமாக இணைக்கப்பட்டுள்ளன என்பது பலூசிஸ்தான் மக்கள் முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டாகும். கைபா்-பக்துன்குவாவில் பாகிஸ்தான் தலிபான் உள்ளிட்ட மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். அந்தப் பிராந்தியத்தில் சமீப காலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால், அந்த மாகாணத்தில் அவசரநிலையை பாகிஸ்தான் அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைபா்-பக்துன்குவா மாகாணத் தலைநகா் பெஷாவரில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற அசீம் முனீா் கூறியதாவது:

ராணுவ வீா்கள் எப்போதும் எந்த விதமான நெருக்கடியான சூழலையும் கையாளத் தயாராக இருக்க வேண்டும். நமது நாட்டில் செயல்படும் இந்திய ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். அவா்கள் எந்த அளவுக்கு சவால் அளித்தாலும் அதனை வீழ்த்தும் வலிமை நமக்கு உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.