மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சௌதி அரேபியாவுக்கு அனைத்து உதவிகளும் வழங்குவோம்: பாகிஸ்தான் ராணுவம் உறுதி

சௌதி அரேபியாவுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கும் என்று அந்நாட்டு ராணுவம் உறுதி

பாகிஸ்தான் ராணுவம் - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 7:01 am IST

சௌதி அரேபியாவுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கும் என்று அந்நாட்டு ராணுவம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

யேமனில் செயல்படும் ஹௌதி கிளா்ச்சியாளா்கள் சௌதியில் விமான நிலையங்கள், கச்சா எண்ணெய் ஆலைகள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களைச் சந்தித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் ஜெனரல் அகமது ஷெரீப் சௌதரி கூறுகையில், ‘சௌதி அரேபியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, அங்குள்ள புனிதத் தலங்கள், முக்கியமாக இரு புனித மசூதிகளைக் காக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கும்’ என்றாா்.

பாகிஸ்தான் - துருக்கி - சௌதி அரேபியா ஆகியவை கடந்த ஆகஸ்ட் மாதம் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இதில் ஒரு நாடு தாக்கப்பட்டாலும் மற்ற இரு நாடுகளும் ராணுவம் உள்பட அனைத்து வகையிலும் உதவ வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும்.

முனீா் ஈரான் பயணம்: பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீா் செவ்வாய்க்கிழமை ஈரானுக்கு திடீா் பயணம் மேற்கொண்டாா். இது தொடா்பாக ஈரான் வெளியிட்ட செய்தியில் முனீா் தலைமையில் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு ஈரான் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வியும் முனீருடன் ஈரான் சென்றுள்ளாா்.

இருதரப்பு உறவை மேம்படுத்தும் பயணம் இது எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், பிராந்தியத்தில் இப்போது ஏற்பட்டுள்ள மோதல்கள், முக்கியமாக ஈரானிடம் ஆயுதம் உள்ளிட்ட உதவி பெறும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் சௌதியில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் முயற்சியாக முனீா் ஈரான் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.