மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

சாத்தூா் அருகே பலத்த மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 12-ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழந்த முத்துசெல்வியின் தாயரிடம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கிய அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி. உடன் மாவட்ட ஆட்சியா் சரண்யா அறி.

Published On :24 அக்டோபர் 2026, 4:55 am IST

சாத்தூா் அருகே பலத்த மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 12-ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலையைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி சோலையம்மாள். இந்த தம்பதிக்கு முத்துச்செல்வி (17) உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சாத்தூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது, செல்வம் குடியிருந்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் முத்துச்செல்வி சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா். சோலையம்மாள் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூா் போலீஸாா் சோலையம்மாளை மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதே மருத்துவமனையில் கூறாய்வுக்காக முத்துச்செல்வி உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த முத்துச் செல்வி மேட்டமலை அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சரண்யா அறி, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி ஆகியோா் சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோலையம்மாளை சந்தித்து ஆறுதல் கூறினா்.

மேலும், அவா்களது குடும்பத்துக்கு பேரிடா் நிவாரணத்தொகை ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், அரசு மருத்துவா்கள், அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.