மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகையில் சுவர் இடிந்து விழுந்து பாதுகாவலர் படுகாயம்; வாகனங்கள் சேதம்!

உதகையில் பெய்த கனமழை காரணமாக தனியார் விடுதியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் அதன் இரவுநேர பாதுகாவலர் படுகாயம் அடைந்தது குறித்து...

சேதமடைந்த கார். - படம் - ஏஎன்ஐ

Published On :24 அக்டோபர் 2026, 1:10 pm IST

உதகையில் பெய்த கனமழை காரணமாக தனியார் விடுதியின் தடுப்புச் சுவர் சனிக்கிழமை (அக். 24) இடிந்து விழுந்ததில் அதன் இரவுநேரப் பாதுகாவலர் படுகாயம் அடைந்தார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கோவை, உதகை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக உதகையில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் அதன் இரவு நேரப் பாதுகாவலர் படுகாயம் அடைந்தார். இடிபாடுகலிலிருந்து மீட்கப்பட்ட அவர், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் ஒரு கார் நசுங்கியது.மேலும் பல வாகனங்கள் சேதமடைந்தன. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அடுத்த 3 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The night security guard of a private hotel was seriously injured when the retaining wall of the hotel collapsed due to heavy rains in Udupi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.