தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகை அருகே மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து! ஓட்டுநர் பலி; பயணிகள் உயிர் தப்பினர்!

பர்லியாறு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பலியானார்...

nilgiris landslide

பர்லியாறு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து - From X

Published On :24 அக்டோபர் 2026, 12:42 pm IST

உதகை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பலியாகியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் பர்லியாறு பகுதியில், சனிக்கிழமை (அக். 24) காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற அரசுப் பேருந்து அப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக ஏற்பட்ட இந்த மண்சரிவில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநர் ஜனகராஜ் பலியான நிலையில், நடத்துநர் கேசவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக, பேருந்தின் டயரில் பஞ்சர் ஏற்பட்டதால், பயணிகள் அனைவரும் பாதிவழியில் இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், 50-க்கும் அதிகமான பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த் தப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் பேருந்துக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரின் உடலை மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அடுத்த 3 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The driver of a government bus that was caught in a landslide on the national highway near Ooty has reportedly died.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.