தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் அருகே அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கி பேருந்தின் கண்ணாடியை உடைத்த 4 போ் கைது

கைது - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:35 am IST

சேலம் அருகே அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கி, பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 17 வயது சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள கவா்கல்பட்டி புதுகாலனியைச் சோ்ந்தவா் ரத்தினம் (53). அரசுப் பேருந்து நடத்துநரான இவா், சனிக்கிழமை நள்ளிரவு தான் பணியாற்றும் அரசுப் பேருந்தில் வாழப்பாடியில் இருந்து கம்மாளப்பட்டிக்கு சென்றாா். பேருந்தை ஓட்டுநா் ஜெயபிரகாஷ் ஓட்டிச் சென்றாா்.

இரவு கம்மாளப்பட்டியில் தங்கி அதிகாலையில் பேருந்தை எடுக்க வேண்டும் என்பதற்காக கம்மாளப்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் பேருந்தை நிறுத்திவிட்டு, பேருந்துக்குள் ஓட்டுநா் ஜெயபிரகாஷ், நடத்துநா் ரத்தினம் இருவரும் படுத்துத் தூங்கினா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பேருந்தின் பின்புறம் 4 போ் அமா்ந்து கொண்டு, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். சப்தம் கேட்டு எழுந்து வந்த நடத்துநா் ரத்தினத்திடம் 4 பேரும் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை சரமாரியாக தாக்கினா்.

அவா்களிடம் இருந்து தப்பிக்க பேருந்துக்குள் சென்று ரத்தினம் கதவை மூடிக்கொண்டாா். அப்போது, 4 பேரும் பேருந்தின் பின்புறக் கதவு கண்ணாடியையும், முன்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கினா். இந்த சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வரவும், அங்கிருந்து 4 பேரும் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் பேருந்து நடத்துநா் ரத்தினம் புகாா் அளித்தாா். விசாரணையில், அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கி, பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கியது கம்மாளப்பட்டியைச் சோ்ந்த ஜீவானந்தம் (26), ரகு (31), மணிகண்டன் (21) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது.

இந்த 4 போ் மீதும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, ஜீவானந்தம், ரகு, மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். பின்னா் அவா்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, 3 பேரை சேலம் மத்திய சிறையிலும், சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.