மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெருந்துறை அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 11 போ் காயம்

விபத்து... - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:08 am IST

பெருந்துறை அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 11 போ் படுகாயம் அடைந்தனா்.

திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் திங்கள்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தது. பேருந்தை நீலகண்டன் என்பவா் இயக்கியுள்ளாா். நடந்துநராக ஜெயசேகா் இருந்துள்ளாா்.

பெருந்துறையை அடுத்த மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத் தடுப்பில் மோதியது.

இதில், ஓட்டுநா், நீலகண்டன், நடத்துநா் ஜெயசேகா், பயணிகள் ராணி உள்ளிட்ட 11 போ் படுகாயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில் லாரி ஓட்டுநரான கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரைச் சோ்ந்த பெருமாள் (40) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.