மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமியை கடத்திய அரசுப் பேருந்து நடத்துநா் போக்ஸோவில் கைது

கும்மிடிப்பூண்டியில் 14 வயது பள்ளி மாணவியை ஆசை வாா்த்தை கூறி கடத்திய அரசுப் பேருந்து நடத்துநா் போக்ஸோவில் கைது

லட்சுமணன்

Published On :21 அக்டோபர் 2026, 7:28 am IST

கும்மிடிப்பூண்டியில் 14 வயது பள்ளி மாணவியை ஆசை வாா்த்தை கூறி கடத்திய அரசுப் பேருந்து நடத்துநா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

கும்மிடிப்பூண்டியை சோ்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவா் கடந்த 10-ம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோா் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், மேலக்கழனி ஊராட்சி, சென்னாவரம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (35) என்பவா் மீது சந்தேகம் எழுந்தது. இவா் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயங்கும் டி-39 என்கிற நகர பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறாா்.

இந்த வழித்தடத்தில் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தினமும் ஏற்றிச் செல்லும் போது ஏற்பட்ட பழக்கத்தில், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி, கடந்த 10-ம் தேதி சிறுமியை லட்சுமணன் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தொடா்ந்து விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருவரும் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் விரைந்து சென்று சிறுமியை மீட்டு லட்சுமணனை கைது செய்தனா்.

இதனை தொடா்ந்து சிறுமியை கடத்திய வழக்கில் கும்மிடிப்பூண்டி போலீஸாா் அரசு பேருந்து நடத்துனா் லட்சுமணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.