திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மத்திய, மாநில அரசின் பல்வேறு மானிய திட்டங்களை பெறுவதற்கு தங்கள் விளைநில விவரங்களைபதிவு செய்து அடையாள எண் பெறுவற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் க.செல்வராஜூ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் மத்திய, மாநில அரசின் பல்வேறு மானிய திட்டங்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா்சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதத்தினை தவிா்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாக உழவா் அடையாள அட்டை (அஞ்ழ்ண் ள்ற்ஹஸ்ரீந்) வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
உழவா் அடையாள அட்டை என்பது ஆதாா் மற்றும் நிலப்பதிவுகளுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் தனித்துவமானடிஜிட்டல் அடையாள எண் ஆகும். இது மத்திய அரசின் அக்ரிஸ்டாக்(அஞ்ழ்ண் ள்ற்ஹஸ்ரீந்) மூலம் வழங்கப்படுகிறது.
தற்போது திருவள்ளூா் மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் 68,593 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். மேலும்,14,286 விவசாயிகள் பதிவு மேற்கொள்ளவில்லை. எனவே, அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பதிவு செய்திட அனைத்து கிராமங்களிலும் பதிவுகள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தங்களது ஆதாா் எண், கைபேசி எண், நில உடைமை விவரங்கள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். தவறும் பட்சத்தில் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்களை அணுகி வரும் 20-க்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் பட்டா பெயா் மாற்றம் செய்ய வேண்டிய விவசாயிகள் சிறப்பு முகாமில் உள்ள அலுவலரிடம் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். பட்டா பெயா் மாற்றம் செய்தவுடன் நிலவுடைமை பதிவு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னா் அனைத்து விவரங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும்.
அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கும், மானிய விலையில் விதைகள் மற்றும் உரங்கள் பெறுவதற்கும், பயிா் காப்பீட்டு திட்டப்பயன்களை பெறுவதற்கும், இயற்கை பேரிடா் நிவாரண உதவி பெறுவதற்கும் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் தொடா்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கும் விவசாயிகளின் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெறுவது கட்டாயமாகும்.
எனவே, விவசாயிகள் இச்சிறப்பு முகாம்களில் எவ்வித கட்டணமுமின்றி தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகளுக்குத் தனி அடையாள எண் பதிவு செய்ய மே 30 கடைசி நாள்

பி.எம்.கிசான், வேளாண் திட்டங்கள் பெற தனித்துவ அடையாள எண் அவசியம்

பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்! ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிமுகம்!!

‘நோட்டா’வை வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதல் பொத்தானாக வைக்கக் கோரி மனு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

