கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு இந்த மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்ற தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும், பி.எம்.கிசான் திட்டத்தில் கெளரவ ஊக்கத்தொகை பெற விவசாயிகள் இந்த அடையாள எண்ணை பெறுவது அவசியமாகும்.
இந்த அடையாள எண் வழங்கும் முகாம் மே 11-ஆம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்களால் நடத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 1,14, 293 விவசாயிகளுக்கு அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளின் விவரங்கள் இலவசமாக பதிவு செய்யப்பட்டு, தனித்துவ அடையாள எண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாவட்டத்தில் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டையின் நகல், நில ஆவணங்களின் நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது கிராமங்களில் முகாம் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் பதிவு மேறகொள்ள மே மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் பெற விளைநில விவரங்களை மே 20-க்குள் பதிவு செய்யலாம்

பி.எம்.கிசான், வேளாண் திட்டங்கள் பெற தனித்துவ அடையாள எண் அவசியம்

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

புதுச்சேரியில் நாளை வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 2,600 போலீஸாா்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

