தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பி.எம்.கிசான், வேளாண் திட்டங்கள் பெற தனித்துவ அடையாள எண் அவசியம்

பி.எம்.கிசான் தவணை மற்றும் வேளாண்மை நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் கட்டாயம் தேவை என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மணி நேரங்கள் முன்பு

பி.எம்.கிசான் தவணை மற்றும் வேளாண்மை நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் கட்டாயம் தேவை என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வேளாண் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமாா் 60 ஆயிரம் விவசாயிகள் உள்ளனா். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சுமாா் 30 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனா்.

இந்நிலையில், பிஎம் கிசான் தவணைத் தொகை பெறவும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மையம் மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் வழியாக பயனாளிகள் பயன்பெறுவதற்கு விவசாயிகளுக்கான தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமாா் 70 சதவீத விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண்களை பெற்றுள்ளனா். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். இதைத்தவிர பொதுச் சேவை மையத்தின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.