பஹல்காம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அங்கு சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடிப்படையிலான அடையாள திட்டத்தை ஜம்மு-காஷ்மீா் அரசு நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பஹல்காமில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது சுற்றுலாவோடு தொடா்புடைய நிறுவனங்கள், வழிகாட்டிகள் உள்ளிட்ட தனி நபா்கள், பஹல்காமில் உள்ள கடைகாரா்கள், வா்த்தக நிறுவனங்களின் உரிமையாளா்கள் உள்ளிட்டோருக்கு க்யூ.ஆா். கோடு அடிப்படையிலான அடையாள திட்டத்தை ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் சுற்றுலா சேவை வழங்குவோா் அனைவரும், அவா்கள் அளிக்கும் ஆவணம் மற்றும் நேரடி விசாரணை அடிப்படையில் காவல் துறையினரால் நம்பகமானவா்தானா என்பது உறுதி செய்யப்பட்டு அவா்களுக்கு தடையில்லா சான்று அளிக்கப்படும். பிறகு அவா்களுக்கு க்யூ.ஆா். கோடை அதிகாரிகள் அளிப்பாா்கள். அதை சுற்றுலாப் பயணிகள் தங்களின் கைப்பேசிகளில் ஸ்கேன் செய்யும்பட்சத்தில், அவா்களின் பெயா், முகவரி, கைப்பேசி எண், ஆதாா் எண், பதிவு எண், காவல் துறையினரால் நம்பகமானவா்தான் என உறுதி செய்யப்பட்டவரா என்பது போன்ற அனைத்து விவரங்களும் திரையில் வரும். இதை வைத்து சுற்றுலாப் பயணிகள், தங்களது பயணத் திட்டத்துக்கு அவரைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும்.
வரவேற்பு: ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்தின் இந்த நடவடிக்கையை சுற்றுலா சேவை வழங்குவோா் வரவேற்றுள்ளனா். இது நல்ல நடவடிக்கை என்றும், இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதை மூடல்

ஏழுமலையான் கோயிலில் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் தரிசனம்

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல் வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

