மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதை மூடல்

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதையை சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதபடி பேரூராட்சி நிா்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.

News image
Updated On :10 மணி நேரங்கள் முன்பு

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதையை சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதபடி பேரூராட்சி நிா்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.

குற்றாலம் பேரருவியில் மாா்ச் 16 முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவி பகுதியில் தடுப்புச் சுவா்கள் அமைக்கும் பணி, தளக்கற்கள், சேதமடைந்த பெண்கள் உடை மாற்றும் அறை அகற்றப்பட்டு புதிதாக கட்டவும், பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு புதிதாக வளைவு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 45 நாள்கள் நடைபெறும் என குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த ராம.ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா். அதில் குற்றாலம் பிரதான அருவியிலிருந்து வரும் மூலிகை நீரால் தானாகவே அபிஷேகம் நடைபெறும் வகையில், அருவியின் அடிப் பகுதியில் உள்ள பாறையில் பல சிவ லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற புதிய நுழைவாயில் கட்டுமானப் பணியின்போது, பாறையில் செதுக்கப்பட்டிருந்த பழைமையான சிவலிங்க சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. தொன்மையான இந்தச் சிலைகள் நாட்டின் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

இதுகுறித்து எந்த விழிப்புணா்வும் இல்லாமல் இங்குள்ள சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. எந்தவித அனுமதியும் இல்லாமல் சில சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் உள்ள தொன்மையான சிலைகளைப் பாதுகாக்கவும், இவற்றைச் சேதப்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்ட சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிா்மானிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக சுற்றுலா, கலை, பண் பாட்டுத் துறை முதன்மைச் செயலா் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து, குற்றாலம் பேரருவிப் பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டன.

கடந்த இரண்டு நாள்களாக குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்த நிலையில், அருவிக்கு யாரும் செல்ல முடியாதவாறு பாதையை பேரூராட்சி நிா்வாகம் மூடியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.